Tuesday, May 19, 2009

இனிப்பு அப்பம் Sweet Appam

முதலில் இனிப்பில் இருந்து தொடங்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப் (நல்ல பாகு வெல்லம் நன்றாக இருக்கும்)
ஏலக்காய் பொடி - சிறிதளவு.
எண்ணெய் - பொரிப்பதற்கு.

Ingredients:
wheat flour - 1 cup
jaggery - 1 cup
cardamom powder - 1 tsp
oil - for frying.( about 1/2 litre)

செய்முறை விளக்கம் :
முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் போதுமானது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெல்லம் கரைத்த தண்ணீரை கோதுமை மாவில் விட்டு பிசையவும். ஒரு கரண்டியில் எடுத்து விடும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் தண்ணீராகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இப்போது ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விடவும். பின்பு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் ஒரு சிறு குழி கரண்டியில் இந்த மாவை எடுத்துப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். காற்று புகாத சம்படத்திலோ அல்லது குளிர்சாதனபெட்டியிலோ இரு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

cooking method :pour some(about 1/2 to 3/4cup) water in jaggery. mix both till jaggery fully dissolves in water. then pour this water in wheat flour and make a batter. mix cardamom powder in this batter. meanwhile, heat oil in a deep frying pan. take batter in a spoon and put this in oil. yon can make 2 or 3 spoons in one turn. after some seconds turn this then cook till it turns to golden brown. then take out of the pan and cool it. now you can taste this. you can store this for 2 days in a airtight container and keep refrigerating.

No comments:

Post a Comment